Monday, 14 January 2013

பீடிகை

சப்தரேகை என்கிற இவ்வலைப்பூத் தமிழ் நவீன கவிதையின் அலமாரி.  இவ்வலைப்பூவில் நவீன கவிஞர்களின் கவிதைகள், பேட்டிகள், மொழிபெயர்ப்புகள், சிறுபத்திரிகை கவிதைகள் வெளியாகும்.  குறிப்பிட்ட கவிஞரின் ஆளுமையை அறிந்துகொள்ளக்கூடிய முக்கியமான கவிதைகளும்  இதில்  இடம்பெறும்.  தற்கால வாசகர்கள் காணமுடியாத, பல கவிஞர்களின் கவிதைத்தொகுப்பின் முதல்பதிப்பு  முகப்பு அட்டையையும்  காண முயற்சிப்போம். இவ்வலைப்பூ தமிழ்க்கவிதையின் நூலகமாகவும் அமைய விருப்பம். மிகச் சிறந்த  கவி ஆளுமைகளை அறிய உதவும் இவ்வலைப்பூவிற்கு ஆதரவு அளியுங்கள்.  மிகச் சிறந்த கவிதைகளை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.

ரா.